உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதிமூர்த்தி கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்

ஆதிமூர்த்தி கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்

பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகே பழையபுதுாரில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஆதிமூர்த்தி பெருமாள் கோவிலில் நேற்று காலை பிரம்மோற்சவ விழா, கொடியேற்றத்துடன் துவங்கியது. இரண்டாம் ஆண்டு பிரமோற்சவ விழாவின், முதல் நாளான நேற்று காலை, 9:00 மணிக்கு, கருடக் கொடியேற்றம் நடந்தது. மாலை, 6:00 மணிக்கு சப்த சரஸ்வதி அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருள ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.இரண்டாம் நாளான இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல், 3:00 மணிக்கு பெருமாள் திருக்கல்யாணம் நடக்கிறது. தொடர்ந்து மாலை, 6:00 மணிக்கு சஷே வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழா, டிச., 1ம் தேதி வரை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !