உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துவரிமானில் டிச.8ல் ஆன்மிக ஒருங்கிணைப்பாளர் முகாம்

துவரிமானில் டிச.8ல் ஆன்மிக ஒருங்கிணைப்பாளர் முகாம்

மதுரை :மதுரை திருவிளையாடல் புராண ஆராய்ச்சி மையம் சார்பில் துவரிமான் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் மண்டபத்தில் டிச., 8 காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை ஆன்மிக ஒருங்கிணைப்பாளர் முகாம் நடக்கிறது.


சின்மயா மிஷன் சுவாமி சிவயோகானந்தா முகாமை துவக்கி வைக்கிறார். 18 வயது முடிந்த, பிளஸ் 2 மற்றும் அதற்கு மேல் படித்தவர்கள் பங்கேற்கலாம். காலையில் திருவிளையாடல் மையம் மற்றும் ஆன்மிக வகுப்பு குறித்த அறிமுகம், ஆன்மிக வகுப்புக்கான பாடத்திட்டம் மற்றும் நெறிமுறைகள், பகலில் தியானம், சிவபூஜை, சத் சங்கம், பஜன் நடக்கின்றன.மாணிக்கவாசகர் அறக்கட்டளை நிர்வாகி பிச்சையா, திருவிளையாடல் ஆராய்ச்சி குழு அமைப்பாளர் காளைராஜன், ஆன்மிக வகுப்புகள் அமைப்பாளர் முருகேசன், மைய நிறுவனத் தலைவர் சந்திரசேகரன் பேசுகின்றனர். முகாமில் கலந்து கொள்வோர் பொருளாளர் சரவணனை 98421 83344, ஒருங்கிணைப்பாளர் 99400 82248 அலைபேசியில் முன்பதிவு செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !