உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கந்தூரி விழா: நாகூர் தர்காவில் பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சி!

கந்தூரி விழா: நாகூர் தர்காவில் பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சி!

நாகப்பட்டினம்: நாகை அடுத்த நாகூர் தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. நாகை அடுத்த நாகூர் ஷாஹூல் ஹமீது பாதுஷா நாயகம் தர்கா 455 ம் ஆண்டு கந்தூரி விழா,வரும் 22 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி அடுத்த மாதம் 2 ம் தேதி சந்தனம் பூசும் வைபவத்துடன் நிறைவடைகிறது.இதை முன்னிட்டு நேற்று அதிகாலை 5.30 மணிக்கு தர்கா பரம்பரை டிரஸ்டி கலிபா மஸ்தான் சாகிப்,துவா ஓதிய பின்,  தர்காவில் உள்ள 5 மினவராக்களிலும் பாய்மரம் ஏற்றப்பட்டது. நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த திரளான யாத்ரீகர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !