ஆத்தூர் ஐயப்பன் கோவிலில் திருவிளக்கு பூஜை
ADDED :2243 days ago
ஆத்தூர்: ஐயப்பன் சுவாமிக்கு, திருவிளக்கு, சங்காபிஷேக பூஜை நடந்தது. ஆத்தூர், கோட்டை, காயநிர்மலேஸ்வரர் கோவில் வளாகத்தில், ஐயப்பன் சுவாமிக்கு தனி சன்னதி உள்ளது. அங்கு, ஆத்தூர், நரசிங்கபுரம் ஐயப்ப சுவாமி பக்தர்கள் குழு சார்பில், நேற்று, உலக நன்மை வேண்டி ?ஹாமம், 108 வலம்புரி சங்கு பூஜை நடந்தது. அதில், சங்குகளிலிருந்த மூலிகை நீரால், ஐயப்பனுக்கு அபிஷேகம் நடந்தது. மதியம் நடந்த, 108 திருவிளக்கு பூஜையில், சுமங்கலி பெண்கள், விளக்கேற்றி வழிபட்டனர். அப்போது, ஐயப்ப சுவாமிக்கு அன்னதான படையல் போடப்பட்டது. மூலவர் ஐயப்பன், வெள்ளி கவச அலங்காரத்திலும், உற்சவர் தங்க கவச அலங்காரத்திலும் அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.