ராமேஸ்வரம் ரத வீதியில் வெள்ளம்
ADDED :2152 days ago
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ரத வீதியில் மழை நீர் தேங்கியதால் பக்தர்கள் அவதிப்பட்டனர்.
நேற்று (நவம்., 29ல்) ராமேஸ்வரத்தில் கனமழை பெய்ததால் பல பகுதியில் தண்ணீர் தேங்கியது. தெற்கு ரத வீதி, கிழக்கு ரத வீதியில் மழைநீருடன், லாட்ஜின் கழிவு நீரும் கலந்து தேங்கியது.
துர்நாற்றம் வீசியதால் பக்தர்கள் அவதிக்குள்ளாகினர். ரத வீதியில் தேங்கிய மழை நீர் கடலில் கலந்தாலும், தொடர் மழையால் தண்ணீர் தேங்கிய வண்ணம் இருந்தது.