பச்சமலை முருகன் கோவிலில் தென்பகுதி மதிற்சுவர் கட்டும் பணி நிறைவு
கோபி: மழைக்கு சரிந்து விழுந்த, கோபி பச்சமலை முருகன் கோவிலின், தென்பகுதி மதிற்சுவர் கட்டும் பணி நிறைவடைந்தது.
கடந்த, 2018 அக்.,8ல், ஒரே நாளில் பெய்த, 58.2 மி.மீ., மழையால், கோபி, பச்சமலை முருகன் கோவிலின், தென்பகுதி மதிற்சுவர் இடிந்து விழுந்தது. மறு கட்டமைப்புக்கு அளவீடு செய்து, உத்தரவு பெற்ற நிலையில், லோக்சபா தேர்தல் நடத்தை விதியால், நீண்ட இழுபறிக்கு பின், கட்டமைப்பு பணி, சில மாதங்களுக்கு முன் துவங்கியது. உபயதாரர் மற்றும் கோவில் நிதியாக ஒன்பது லட்சம் ரூபாய் மதிப்பில், நடந்த கட்டமைப்பு பணி நேற்றுடன் நிறைவு பெற்றது. இந்த கட்டமைப்புக்கு, எம்.சேண்ட் மணல் ஏற்றிய லாரி, கடந்த, 2ம் தேதி இரவு, பயணித்தபோது மலைப்பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவால் கவிழ்ந்தது. இதற்கான பணி, மூன்று லட்சம் ரூபாய் மதிப்பில் நடக்கிறது. இப்பணி முடிந்ததும், கனமழையால் சரிந்து விழுந்த, வடக்குப்பகுதியின் மதிற்சுவர் கட்டமைப்பு பணி துவங்கும் என, அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.