உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / போத்தம்பாளையம் வீரமாத்தி அம்மன் கோவில் பொங்கல் விழா

போத்தம்பாளையம் வீரமாத்தி அம்மன் கோவில் பொங்கல் விழா

அவிநாசி; ஈசக்கண்ணன் புதூரில் எழுந்தருளிய ஸ்ரீவீரமாத்தியம்மன் கோவிலில் பொங்கல் விழா நடைபெற்றது.


அவிநாசி வட்டம், புலிப்பார் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ வீரமாத்தியம்மன், ஒண்டி கருப்பராயன், கருமலை ஆண்டவர் உள்ளிட்ட பரிவார மூர்த்திகள் கோவிலில் பொங்கல் விழா கடந்த 3ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. அதனை தொடர்ந்து வீரமாத்தியம்மன் படைக்கலம், ஒண்டி கருப்பராயன் சுவாமி வான வேடிக்கையுடன் படைக்கலம் புறப்பட்டு கோவில் செல்லுதல், கருமலை ஆண்டவர் பூஜை ஆகியவை நடைபெற்றது. இன்று 500-க்கும் மேற்பட்ட கிடாய்கள் ஒண்டிக்கருப்பராயன் பூஜையில் வேண்டுதலுக்காக பக்தர்களால் பலியிடப்பட்டது. நாளை மறு பூஜையுடன் பொங்கல் விழா நிறைவு பெறுகிறது. ஈசக்கண்ணன் புதூர் ஊர் மக்கள் சார்பில் பொது அசைவ விருந்து வழங்கினர்.




தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !