உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாலக்காடு கண்ணுகோட்டு பகவதி அம்மன் கோவிலில் ஆறாட்டு மகோற்சவ விழா

பாலக்காடு கண்ணுகோட்டு பகவதி அம்மன் கோவிலில் ஆறாட்டு மகோற்சவ விழா

பாலக்காடு: பாலக்காடு, கண்ணுகோட்டு பகவதி அம்மன் கோவிலில் ஆறாட்டு மகோற்சவ விழா கொடியேற்றம் நடந்தது.


கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், பிராயிரி கண்ணுகோட்டு பகவதி அம்மன் கோவிலில், ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் ஆறாட்டு மகோற்சவம் நடக்கிறது. நடப்பாண்டு ஆறாட்டு மகோற்சவத்துக்கு நேற்று மாலை கொடியேற்றம் நடந்தது. மாலை, 7:00 மணிக்கு தந்திரி பிரஹ்மஸ்ரீ அணிமங்கலம் வாசுதேவன் நம்பூதிரியின் தலைமையில், கொடியேற்றம் நடந்தது. உற்சவ நாளான, டிச. 1ம் தேதி மகாகணபதி ஹோமம், அபிஷேகம், உஷ பூஜை, கலச பூஜை, அஷ்டபதி, மஞ்சள் நீராட்டு (ஆறாட்டு), பிரஹ் மகலசாபிஷேகம், ஐந்து யானைகளின் அணிவகுப்புடன் காழ்ச்ச சீவேலி, அன்னதானம், அம்மன் எழுந்தருளும் வைபவம், நிர்மால்லிய தரிசனம், சந்தன காப்பு, சுற்றுவிளக்கு ஏற்றுதல், தீபாராதனை ஆகியவை நடக்கிறது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !