உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செங்கழனி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை

செங்கழனி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை

செங்கழனி அம்மன் கோவில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் நேற்று விமரிசையாக நடந்தது.

சென்னை, புழுதிவாக்கத்தில் பழமை வாய்ந்த செங்கழனி அம்மன் இக்கோவிலில், மங்களாம்பிகை சமேத மங்களேஸ்வரர், கால பைரவர், தேவி வாராஹி மற்றும் பரிவார தெய்வங்கள் தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர்.

இக்கோவிலின் திருப்பணி முடிந்த நிலையில், அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நேற்று விமரிசையாக நடந்தது.

இதையொட்டி, நேற்று முன்தினம் யாகசாலை வளர்க்கப்பட்டு ஹோமங்கள் நடந்தன. நேற்று காலை மகா பூர்ணாஹுதி, ஆராதனை, கடப்புறப்பாடு நடந்தது.

அதைத் தொடர்ந்து மங்களாம்பிகளை சமேத மங்ளேஸ்வரர், பரிவார தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். மாலை உற்சவர் திருவீதி உலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !