உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குமரக்கோட்டம் முருகன் கோவில்: தங்க முலாமில் ஜொலிக்கும் தண்டாயுதபாணி மண்டபம்

குமரக்கோட்டம் முருகன் கோவில்: தங்க முலாமில் ஜொலிக்கும் தண்டாயுதபாணி மண்டபம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோவில் மகா கும்பாபிஷேகம் வரும் 29ம் தேதி நடைபெற உள்ள நிலையில், கோவில் வளாகத்தில் உள்ள

தண்டாயுதபாணி மண்டபம் தங்க முலாம் கவசத்தால் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோவில் மகா கும்பாபிஷேகம் வரும் 29ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தண்டாயுதபாணி மண்டபம் மற்றும் மூலவர்

மண்டபத்தில் உள்ள எட்டு துாண்களும் தங்க முலாம் கவசத்தாலும், மூலவர் வாயில் நுழைவுப் பகுதி வெள்ளிக் கவசத்தாலும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. வீதியுலாவுக்கென

புதியதாக வெள்ளி மயில் வாகனம் வந்துள்ளது.

இது குறித்து யாகசாலை பூஜைகளை நடத்தும் இ.ஏ.பிரபாகர குருக்கள் மற்றும் கோவில் தலைமை சிவாச்சாரியார் கே.ஆர். காமேசுவர குருக்கள் ஆகியோர் கூறியதாவது:

கும்பாபிஷேகத்தையொட்டி கோவில் வளாகத்தில் மூலவருக்கென நவாக்னி யாகசாலையும், 20 பரிவார மூர்த்திகளுக்கென யாகசாலைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

யாகசாலை பூஜையில் 100 சிவாச்சாரியார்கள், 40 திருமுறை ஓதுவார்கள் பங்கேற்க உள்ளனர்.

காஞ்சி சங்கராச்சாரியார்கள் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சத்திய சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் ஞானப்பிரகாச

சுவாமிகள் ஆகியோரது நல்லாசிகளுடன் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !