உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கர் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கர் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உப கோவிலான காட்டழகிய சிங்கர் பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோபுர கலசங்களில் பட்டாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றினர்.

திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான காட்டழகிய சிங்கப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நேற்றுமுன் தினம் காலை, திருச்சி கொள்ளிடம் ஆற்றில் இருந்து, யாகசாலை பூஜைகாக, யானை மீது வைத்து புனிதநீர் எடுத்து வரப்பட்டது. மங்கல வாத்தியத்துடன் சித்திரை வீதிகள் வழியாக, புனித நீர் யாகசாலைக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து, கணபதி ஹோமம் மற்றும் யாகசாலை பூஜைகள் துவங்கின. 29 மற்றும் 30ம் தேதி பல்வேறு பூஜைகள் நடத்தி, இன்று(1ம் தேதி) காலை 8:45 மணிக்கு கோபுர கலசங்களில் பட்டாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !