உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜமீன்ஊத்துக்குளி மாகாளியம்மன் கோவிலில் நாளை குண்டம் திருவிழா

ஜமீன்ஊத்துக்குளி மாகாளியம்மன் கோவிலில் நாளை குண்டம் திருவிழா

பொள்ளாச்சி: ஜமீன்ஊத்துக்குளி, மாகாளியம்மன் கோவில் திருவிழாவில், நாளை குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.

பொள்ளாச்சி அருகே, ஜமீன் ஊத்துக்குளி மாகாளியம்மன் கோவிலில் திருவிழா, கடந்த, 24ம் தேதி சக்தி கும்பம்ஸ்தாபனம் செய்தல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. 26ம் தேதி இரவு, 7:00 மணிக்கு கோவில் பூவோடு வைத்தல் நிகழ்ச்சியும், முக்கிய புண்ணிய ஸ்தலங்களில் இருந்து தீர்த்தம் கொண்டு வந்து அபிேஷக வழிபாடும் நடந்தது. இன்று காலை, 7:00 மணிக்கு குண்டம் திறப்பு, மாலை, 4:00 மணிக்கு விநாயகர் கோவிலில் இருந்து பூவோடு புறப்படுத்தல், இரவு, 8:00 மணிக்கு அகத்துார் அம்மன் கோவில் தீர்த்தம் கொண்டு வருதல், இரவு, 9:00 மணிக்கு அக்னி குண்டம் வளர்த்தல் உள்ளிட்ட பூஜைகள் நடக்கிறது. நாளை (11ம் தேதி) காலை, 7:00 மணிக்கு பக்தர்கள் குண்டம் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். காலை, 8:00 மணிக்கு அம்மனுக்கு பொங்கல், மாவிளக்கு வழிபாடு நடக்கிறது. வரும்,13ம் தேதி காலை, சுவாமி ஊர்வலம், மஞ்சள் நீராடுதல், இரவு, மகா அபிேஷகம், ஆராதனை உள்ளிட்ட பூஜைகள் நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !