உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திண்டுக்கல் மாவட்ட சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

திண்டுக்கல் மாவட்ட சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

திண்டுக்கல்: புரட்டாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட சிவன் கோயில்களில் சுவாமிக்கும், நந்திக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் ஞானாம்பிகை, காளஹஸ்தீஸ்வரர், பத்மகிரீஸ்வரர், அபிராமி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. மாலை நந்தி, கொடிமரம், காளஹஸ்தீஸ்வரர், பத்மகிரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது.


திண்டுக்கல் ஆர்.எம்.,காலனி வி.ஐ.பி., நகர் குபேரலிங்கேஸ்வரர் கோயிலில் நந்தி, காந்திஜி புதுரோடு ஆதிசிவன் கோயில், மேற்கு ரதவீதி சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.


நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயில், அய்யாபட்டி ருத்ர லிங்கேஸ்வரர் கோயில், சிறுமலை சிவசக்தி சித்தர் பீடம், காம்பார்பட்டி மாதா புவனேஸ்வரி உடனுறை ஆத்ம லிங்கேஸ்வரர் 1008 சிவன் கோயில், கணவாய்பட்டி சிவன் கோயில், குட்டூரில் உண்ணாமலை அம்பாள் உடனுறை அண்ணாமலையார் கோயில், ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதி, விருப்பாச்சி தலையூற்று நல்காசி விஸ்வநாதர் கோயில், ஒட்டன்சத்திரம் ரத்தினகிரீஸ்வரர் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.


பழநி முருகன் கோயில் கைலாசநாதர் சன்னதி, அடிவாரம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், கிழக்கு ரத வீதி பெரியநாயகி அம்மன் கோயில், கோதைமங்கலம் பெரியாவுடையார் கோயில், அ.கலையம்புத்துார் கல்யாணியம்மன் உடனுறை கைலாசநாதர் கோயில், பொருந்தல் அமுதீஸ்வரர் கோயில், மதனபுரம் அண்ணாமலையார் கோயில், புது நகர் ஞானாம்பாள் உடனுறை யோகேஸ்வரர் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.


சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயில், சித்தையன்கோட்டை காசி விஸ்வநாதர் கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், காரமடை ராமலிங்க சுவாமி கோயில், வத்தலக்குண்டு அங்காள ஈஸ்வரி அம்மன் வாலகுரு நாதலிங்கேஸ்வரர், வடமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், தென்னம்பட்டி நந்தீஸ்வரர் கோயில், சிங்காரக்கோட்டை நாகநாத சுவாமி கோயில், எரியோடு சாய்பாபா ஞானலாயம் உள்ளிட்ட கோயில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடுகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !