மேலுாரில் தர்மசாஸ்தா ஐயப்பன் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :2145 days ago
மேலுார்: மேலுாரில் தர்மசாஸ்தா ஐயப்பன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.இதையொட்டி நவ., 29 முதல் மூன்று நாட்களாக யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று (டிசம்., 1ல்) இப்பூஜை கள் நிறைவு பெற்று சிவாச்சார்யார் தட்சிணாமூர்த்தி கும்பத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேக த்தை நடத்தினார். ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.