திருப்பரங்குன்றத்தில் மகாதீபம்: உபயதாரர்களுக்கு அழைப்பு
ADDED :2105 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் சார்பில் டிச. 10ல் மலை மீதுள்ள உச்சி பிள்ளையார் கோயில் மண்டபம் அருகே கார்த்திகை மகாதீபம் ஏற்றப்படுகிறது. இதற்காக நான்கரை அடி உயரம், இரண்டரை அடி அகலம் கொண்ட தாமிர கொப்பரை, 300 லிட்டர் நெய், 150 மீட்டர் காடா துணி திரி, 5 கிலோ கற்பூரம் பயன்படுத்தப்படும். தீபத்திற்கு நெய் வழங்க விரும்புபவர்கள் கோயில் அலுவலகத்தில் வழங்கலாம். விபரங்களுக்கு 0452 - 248 2248ல் தொடர்பு கொள்ளலாம்.