திருத்தணி லிங்கேஸ்வரர் கோவிலில் லட்சதீபம்
ADDED :2424 days ago
திருத்தணி: திருத்தணி சதாசிவ லிங்கேஸ்வரர் கோவிலில், நேற்று முன்தினம் இரவு நடந்த லட்ச தீபம் நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, நெய்தீபம் ஏற்றி வழிபட்டனர்.
திருத்தணி, பழைய தர்மராஜா கோவிலில், நேற்று முன்தினம் இரவு, கார்த்திகை மாதம், சோமவாரம திங்கட்கிழமையையொட்டி, லட்சதீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி, காலை மற்றும் மாலை என, இரண்டு வேலைகளில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.இரவு, 7:30 மணிக்கு, கோவில் வளாகத்தில் லட்சதீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதில், திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டனர்.