வேண்டும் மனப்பக்குவம்
ADDED :2164 days ago
ஒருவர் நமக்கு தீமை செய்தால் அதையே அவருக்கு திரும்பச் செய்ய வேண்டும் என மனதால் கூட நினைக்க கூடாது. தீமை செய்பவன் தானாகவே தீமையில் சிக்குவான். கெட்டவன் தன் மமதையால் எளியவனைத் துன்புறுத்துகிறான். தாங்கள் கற்பிக்கும் தந்திர மோசங்களில் அவர்களாகவே அகப்படுவர். எவனும் தீமைக்கு தீமை செய்யாதபடி பார்த்துக் கொள்ளுங்கள். “தாங்கள் என்ன செய்கிறோம் என்று அறியாமல் இவர்கள் செய்கிறார்கள். இவர்களை மன்னியும்” என்று துன்பம் செய்தவருக்கும் நன்மையே நினைப்பது நல்லது. அந்நிலையில் எல்லாம் நல்லதாகவே நடக்கும்.