தட்டாம்பாளையம் திரவுபதியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :1 hours ago
பண்ருட்டி: திரவுபதியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பண்ருட்டி அடுத்த தட்டாம்பாளையம் திரவுபதியம்மன் கோவில், வேணுகோபாலசுவாமி பஜனை மடம், மற்றும் விநாயகர், கருடர்,ஆஞ்சநேயர், 12 ஆழ்வார்கள், மகாலட்சுமி உள்ளிட்ட சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி, கடந்த 25 ம்தேதி மாலை விஷ்ணு சகஸ்ர ேஹாமம்; அடுத்தடுத்த தினங்களில், மகா சுதர்சன ேஹாமம், வாஸ்துசாந்தி, உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகள் நடந்தன.கடந்த, 28 ம்தேதி காலை கும்பராதனம், மகாபூர்ணாகுதி, கடம் புறப்பாடாகி கும்பாபிஷேகம் நடந்தது.இதில், தி.மு.க., ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன், முன்னாள ஒன்றிய செயலாளர் திருவேங்கடம், மேற்கு ஒன்றிய செயலாளர் ராமு, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பர்வதம் ஜெயமூர்த்தி, கதிரவன்,குமார் கோபு, தணிகைவேல், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.