உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மந்திர விமானம்

மந்திர விமானம்

கோயிலுக்கு செல்லும் ஒவ்வொருவரும் கருவறை மீதுள்ள விமானத்தை  தரிசனம் செய்வது நல்லது. பெருமாள் கோயில்களில் 96 வகையான விமானங்கள் உள்ளன. இதில் அஷ்டாங்க விமானம்  விசேஷமானது.  108 திவ்ய தேசங்களில் மதுரை கூடழலகர் கோயில், சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமிய  நாராயணப் பெருமாள் கோயிலில் மட்டும் அஷ்டாங்க விமானம்  உள்ளது. மதுரையிலுள்ள விமானத்தின் உயரம் 125 அடி. மூன்று நிலைகளுடன்,  எட்டு பகுதிகளாக நிற்கும் இந்த விமானம் ’ஓம் நமோ நாராயணாய’ என்ற  மந்திரத்தின் வடிவமாகும். இந்த கோயிலில் விமானத்தில் ஏறிப் பார்க்க பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !