விழுப்புரம் அகஸ்தீஸ்வரர் கோவிலில் சங்காபிஷேகம்
ADDED :2240 days ago
விழுப்புரம்:விழுப்புரம், ஆனாங்கூரில் உள்ள ஸ்ரீ காமாட்சி அம்மன் சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம் நடந்தது.மூன்றாவது சோமவாரத்தையொட்டி, நேற்று முன்தினம் (டிசம்., 3ல்) மாலை 6.00 மணிக்கு அகஸ்தீஸ்வரர் சுவாமிக்கு 108 சங்காபிஷேகம் மற்றும் அபிஷேக ஆராதனை நடந்தது. ஏற்பாடுகளை, ஆலய நிர்வாக குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.