சென்னை கபாலீஸ்வரர் கோவிலுக்கு வெடிகுண்டு புரளி
ADDED :2187 days ago
சென்னை: சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்ததையடுத்து பரபரப்பு ஏற்பட்டது. சைதாப்பேட்டை முகமது ஹனீப் பாகவி என்ற பெயரில் வந்த கடிதத்தில், வெளிநாட்டு வெடிகுண்டுகளை வைத்து கோவிலை தகர்த்து விடுவேன் என்று எழுதப்பட்டிருந்தது. இதையடுத்து போலீசார் மோப்பநாய் உதவியுடன் கோவில் வளாகத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின் முடிவில் மிரட்டல், வெறும் புரளி என தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.