உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மொடக்குறிச்சி நஞ்சை ஊத்துக்குளி மாரியம்மன் கோவில் தேரோட்டம்

மொடக்குறிச்சி நஞ்சை ஊத்துக்குளி மாரியம்மன் கோவில் தேரோட்டம்

மொடக்குறிச்சி: மொடக்குறிச்சி, நஞ்சை ஊத்துக்குளி மாரியம்மன் கோவிலில், கார்த்திகை மாதத்தில் தேர்திருவிழா நடக்கிறது. நடப்பாண்டு விழா, கடந்த மாதம், பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. கொடியேற்றத்தை தொடர்ந்து, மகந்தேர் இழுத்தல், தீச்சட்டி ஊர்வலம், காவிரியில் தீர்த்தம் எடுத்தல், பால்குடம் எடுத்தல் என ஒவ்வொரு நாளும், நிகழ்ச்சி நடந்தது.

இந்நிலையில் முக்கிய நிகழ்வான தேரோட்டம், நேற்று (டிசம்., 5ல்) காலை, 10:00 மணியளவில் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், மக்கள் வடம் பிடித்து இழுத்தனர். அலகு குத்திய பக்தர்கள், தேர் முன் ஆட்டமாடி, மெய் சிலிர்க்க வைத்தனர். மாலையில் தேர் நிலை நிறுத்தப் பட்டது. மாரியம்மனுக்கு இன்று (டிசம்., 6ல்) சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடக்கிறது. நாளை (டிசம்., 7ல்) மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !