சபரிமலையில் புலி நடமாட்டம்: பக்தர்கள் பீதி
ADDED :2230 days ago
சபரிமலை : சபரிமலையில், புலி நடமாட்டம் உள்ளதால், பக்தர்களிடம் பீதி ஏற்பட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலையில், நேற்று அதிகாலை, தேவசம்போர்டு உணவகம் பின்புறம், பெய்லி பாலத்தை கடக்க முயன்ற இரண்டு போலீசார், அப்பகுதியில் புலி நிற்பதை பார்த்து, அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். கூடுதல் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, பட்டாசு வெடித்து புலியை, வனப்பகுதியினுள் விரட்டினர். எனினும், ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் இடையே, பீதியை ஏற்படுத்தியுள்ளது.