உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திண்டிவனம் பஞ்சமுக சுந்தர விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

திண்டிவனம் பஞ்சமுக சுந்தர விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

திண்டிவனம்: திண்டிவனம் செஞ்சி சாலையில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் திடல், பஞ்ச முக சுந்தர விநாயகர் கோவிலின் கும்பாபிஷேகம் நேற்று (டிசம்., 6ல்)நடந்தது.

அதனையொட்டி, நேற்று (டிசம்., 6ல்) காலை யாகசாலை பூஜையைத் தொடர்ந்து கடம் புறப் பாடாகி 10.00 மணிக்கு மேலமங்கலம் தம்பிரான் சுவாமிகள் தலைமையில் கோபுர கலசங் களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.விழாவில், கோவில் தலைவர் சம்பத்குமார், முன்னாள் ஊராட்சி தலைவர் ரவிச்சந்திரன், நிர்வாகிகள் திருவேங்கடம், ஏழுமலை, ஓம்சக்தி சேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !