சபரிமலை வருமானம் ரூ.66.11 கோடி
ADDED :2124 days ago
சபரிமலையில் மண்டல கால வருமானம் டிச., ஐந்தாம் தேதி வரை ரூ.66.11 கோடியாக உயர்ந்தது. கடந்த ஆண்டு இதே கால அளவில் 39.49 கோடியாகும். கடந்த ஆண்டை ஒப்பிடும் போது 26.62 கோடி ரூபாய் அதிகம் கிடைத்துள்ளது. ஆனால் 2017 சீசனை ஒப்பிடும் போது 8.56 கோடி ரூபாய் குறைவாகும். 2017-ல் இதே நாளில் வருமானம் 74.67 கோடி ரூபாயாக இருந்தது.