உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்னையின் 148 வது பிறந்தநாள்; அன்னை அரவிந்தர் அறையில் பக்தர்கள் தரிசனம்

அன்னையின் 148 வது பிறந்தநாள்; அன்னை அரவிந்தர் அறையில் பக்தர்கள் தரிசனம்

புதுச்சேரி; அன்னையின் 148வது பிறந்தநாளையொட்டி புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் அன்னை, அரவிந்தர் அறையை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


பக்தர்களால் அன்னை என்று அன்போடு அழைக்கப்படும் (மிர்ரா அல்பாசா) அவர்கள் பிரான்ஸ் நாட்டில் 1878 ஆம் ஆண்டு பிறந்தார். புதுச்சேரியில் அரவிந்தரை சந்தித்து அவரது ஆன்மிக பணிகளை மேற்கொண்டு, அரவிந்தர் ஆசிரமம் மற்றும் ஆரோவில் சர்வதேச நகரத்தை உருவாக்கினார். 1973 ஆம் ஆண்டு புதுச்சேரியில் அன்னை காலமானார். அன்னையின் 148 ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி இன்று புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் உள்ள அன்னை மற்றும் அரவிந்தர் அறையை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். முன்னதாக காலை 5 மணியிலிருந்து 6 மணிவரை ஆசிரமவாசிகளின் கூட்டுப் பிரார்த்தனை ஆசிரமத்தில் நடந்தது.‌


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !