பெருநகர் பாலபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :2231 days ago
பெருநகர்:பெருநகர் பாலபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசையாக நேற்று (டிசம்., 8ல்) நடந்தது.
உத்திரமேரூர் அடுத்த, பெருநகர் அகத்தியப்பா நகரில், பாலபுரீஸ்வரர் கோவில் உள்ளது. பழமை யான இக்கோவில், கும்பாபிஷேகத்தையொட்டி புணரமைக்கபட்டது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் (டிசம்., 7ல்), கணபதி ஹோமத்துடன் யாக சாலை பூஜை துவங்கியது. கும்பாபிஷேக தினமான நேற்று (டிசம்., 8ல்), காலை, 10:30 மணிக்கு, கோவில் கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் விமரிசையாக நடத்தப் பட்டது. நேற்று இரவு, கோவில் வளாகத்தில் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில், பாலபுரீஸ்வரர் வீதி யுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.