ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் 1,008 சங்காபிஷேகம்
ADDED :2236 days ago
நாமக்கல்: நாமக்கல், தட்டார தெருவில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் காமாட்சி அம்மன் கோவிலில் கார்த்திகை பிரதோஷத்தை முன்னிட்டு, நேற்று மாலை, 1,008 சங்கு அபிஷேகம் நடந்தது. முன்னதாக கோவிலில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் மற்றும் நந்திக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் மற்றும் திருநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு நறுமண பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, மலர் அலங்காரத்தில் சுவாமி அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர். அதேபோல், வள்ளிபுரம் தான்தோன்றீஸ்வரர் கோவில், மோகனூர் சாலை, சித்தர்மலை, ஜோதி கந்த மகாலிங்கேஸ்வரர் கோவில், கொல்லிமலை அரப்பளீஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில், பிரதோஷத்தையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது.