பெரியகுளம் வடகரை பகவதியம்மன் கோயில் மாசித் திருவிழா நிறைவு
ADDED :211 days ago
பெரியகுளம்; பெரியகுளம் வடகரை பகவதியம்மன் கோயில் மாசித்திருவிழா நிறைவு நாளை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் அக்னி சிட்டி எடுத்து அம்மனை வழிபட்டனர். இக்கோயில் ஹிந்து அறநிலையத்துறைக்கு உட்பட்டது. பிப். 24 ல் சாட்டுதலை தொடர்ந்து, மார்ச் 2ல் திருவிழா துவங்கியது. இன்று வரை 10 நாட்கள் திருவிழா நடந்தது. தினமும் நடந்த மண்டகப்படிதாரர் நிகழ்ச்சியில் அம்மன் அன்னபட்சி, காளை, சிம்மம், மின்விளக்கு, புஷ்புபல்லாக்கு உட்பட பல்வேறு வாகனத்தில் வடகரை முக்கிய வீதிகளின் வழியாக வீதி உலா வந்தார். முக்கிய திருவிழாவான இன்று ஏராளமான பக்தர்கள் அக்னிசட்டி, மாவிளக்கு, பால்குடம், காவடி எடுத்தல், சிவன், பார்வதி, நாரதர், முனிவர் வேடமிட்டு மின்விளக்கு அலங்காரத்துடன் ரத ஊர்வலம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். மார்ச் 17ல் மறுபூஜை நடக்கிறது.