சின்ன மேட்டுப்பாளையத்தில் அகண்ட நாம சங்கீர்த்தன விழா
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே சின்ன மேட்டுப்பாளையத்தில் உள்ள பூமி நீளா நாயகி சமேத திருவேங்கடநாதர் பெருமாள் திருக்கோயிலில், 12ம் ஆண்டு அகண்ட நாம சங்கீர்த்தன விழா நடந்தது. விழாவையொட்டி மூலவருக்கும், உற்சவ மூர்த்திகளுக்கும் சிறப்பு திருமஞ்சனங்கள், சேவா கால கோஷ்டியாரின் சாற்று முறையும், தளிகை நிவேதனமும், திருவேங்கடநாத பெருமாள் பஜனை கோஷ்டியாரின் திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை நடந்தன. தொடர்ந்து, காலை, 8:00 மணி முதல் இரவு, 10:00 மணி வரை பீளமேடு கரி வரதராஜ பெருமாள் கோஷ்டியினர், சின்னக்குயிலி ஸ்ரீ கிருஷ்ண லீலா பிருந்தாவன குழுவினர், நாயக்கனூர் ஸ்ரீ நரசிங்க பெருமாள் கோயில் பஜனை கோஷ்டியினர், பழைய புதூர் ஆதிமூர்த்தி பெருமாள் கோயில் பஜனை கோஷ்டியினர், திருப்பூர் முத்து பாண்டுரங்கன் பஜனை கோஷ்டியினர், டி.ஜி. புதூர் சீனிவாச பெருமாள் கோயில் பஜனை கோஷ்டியினரின் பஜனைகள் நடந்தன. விழாவையொட்டி அன்னதானம், திவ்ய பிரபந்த சாற்றுமுறைகள் நடந்தன. நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.