உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் தேரோட்டம் விமரிசை

காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் தேரோட்டம் விமரிசை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில், சித்திரை பெருவிழாவின் ஏழாம் நாள் உத்வமான இன்று காலை தேரோட்டம் விமரிசையாக நடந்தது.


காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோத்சவம் கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, மாலையில் சுவாமி பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வருகிறார். அதன்படி முதல் நாள் உத்சவத்தில் காலையில், சப்பரத்திலும், மாலை சிம்ம வாகனத்திலும் உலா வந்தார். இரண்டாம் நாள் உத்சவமான கடந்த 2ம் தேதி காலை ஹம்ச வாகனத்திலும், மாலை சூரிய பிரபையிலும், மூன்றாவது நாளான 3ம் தேதி காலை கருட வாகனத்திலும், மாலை ஹனுமந்த வாகனத்திலும் உலா வந்தார். இதில், நான்காம் நாள் உத்சவத்தில் காலை சேஷ வாகனத்திலும், மாலை சந்திர பிரபையிலும், ஐந்தாம் நாள் உத்சவமான கடந்த 5ம் தேதி, காலை நாச்சியார் திருக்கோலத்திலும், மாலை யாளி வாகனத்திலும் உலா வந்தார். ஆறாம் நாள் உத்சவமான நேற்று முன்தினம் காலை வேணுகோபாலன் திருக்கோலத்திலும், மாலை யானை வாகனத்திலும் உலா வந்தார். இதில், ஏழாம் நாள் உத்சவமான நேற்று காலை தேரோட்டம் நடந்தது.இ தில், இன்று காலை 5:00 மணிக்கு மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவியருடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் அஷ்டபுஜ பெருமாள் எழுந்தருளினார்.  தொடர்ந்து பல்வேறு பூஜைகளுக்குப்பின், அதிர்வேட்டுகள் முழங்க, மங்கல வாத்தியங்கள் ஒலிக்க, பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரில் அசைத்து ஆடியபடியே அஷ்டபுஜ பெருமாள் பவனி வந்தார்.மாலை திருமஞ்சனம் நடந்தது. எட்டாம் நாள் உத்சவமான நாளை காலை திருப்பாதம்ஜாடி திருமஞ்சனமும், மாலை குதிரை வாகன உத்சவமும், ஒன்பதாம் நாள் உத்சவமான நாளை காலை ஆள்மேல் பல்லக்கும், மாலை சக்ரகோட்டி விமான உத்சவமும் நடைபெறுகிறது. வரும் 10ம் தேதி காலை த்வாதச ஆராதனமும், மாலை வெட்டிவேர் சப்பரத்துடன் சித்திரை பிரம்மோத்சவம் நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !