உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்

திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்

மாமல்லபுரம்: திருவிடந்தை, நித்ய கல்யாண பெருமாள் கோவிலில், இன்று தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. மாமல்லபுரம் அடுத்த, திருவிடந்தையில், நித்ய கல்யாண பெருமாள் கோவிலில், சித்திரை பிரம்மோத்சவம், கடந்த 1ம் தேதி, கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, சுவாமி, தினமும், காலை, இரவு வெவ்வேறு வாகனத்தில் சேவையாற்றி, வீதியுலா சென்று அருள்பாலிக்கிறார். கடந்த 5ம் தேதி இரவு, முக்கிய உத்சவமாக, கருட வாகனத்தில் சேவையாற்றினார். மற்றொரு முக்கிய உத்சவமாக, இன்று திருத்தேரில் உலா சென்றார். நித்ய கல்யாண பெருமாள், தேவியருடன், கோவிலில் இருந்து, காலை 9:30 மணிக்கு புறப்பட்டு, திருத்தேரில் எழுந்தருளினார். தேரில் பூஜை நடத்தியதைத் தொடர்ந்து, பக்தர்கள் கோவிந்தா ... கோவிந்தா... என முழங்கி, வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். வீதிகளில் உலா சென்று, 11:00 மணிக்கு நிலையை அடைந்தார். மாலை, வசந்த மண்டபத்தில் திருமஞ்சனமும், இரவு, தோளுக்கு இனியான் வைபவமும் கண்டு, வீதியுலா சென்றார். வரும் 10ம் தேதி, தெப்போத்சவம் நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !