உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மண்பானைகள், உண்டியல்கள் விரும்பி வாங்கும் வீரபாண்டி பக்தர்கள்

மண்பானைகள், உண்டியல்கள் விரும்பி வாங்கும் வீரபாண்டி பக்தர்கள்

தேனி: வீரபாண்டி சித்திரை திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் மண்பானைகள், மண் உண்டியல்கள் விரும்பி வாங்குவதால் வியாபாரிகள் கூறினர். 


வீரபாண்டி சித்திரை திருவிழாவில் அக்னிசட்டி, ஆயிரம் கண் பானை உள்ளிட்ட நேர்த்திக்கடன் செலுத்த பக்தர்கள் வருகின்றனர். பெரும்பாலான பக்தர்கள் வீரபாண்டி ஆற்றங்கரை அருகே அமைந்துள்ள மண்பாண்ட பொருட்கள் விற்பனை கடைகளில் அக்னி சட்டி, ஆயிரம் கண் பானை, தீர்த்தம் எடுத்து ஊற்ற சிறிய மண் கலயங்கள் உள்ளிட்டவற்றை வாங்குகின்றனர். அதனை வாங்கும் போது அங்கே விற்க்கப்படும் பிற மண்சட்டிகள், பல வடிவங்களை செய்யப்பட்ட உண்டியல்கள் உள்ளிட்டவற்றை விரும்பி வாங்கி செல்கின்றனர். கோடை காலம் என்பதால் பானைகளை விரும்பி வாங்கி செல்வதாக வியாபாரிகள் கூறினர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !