உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாலக்காடு முனீஸ்வரர் கோவில் தாலப்பொலி மஹோத்சவம்

பாலக்காடு முனீஸ்வரர் கோவில் தாலப்பொலி மஹோத்சவம்

பாலக்காடு : முனீஸ்வரர் கோவில் தாலப்பொலி மஹோத்சவம் வெகு விமர்சியாக நடைபெற்றது.

கேரள மாநிலம் பாலக்காடு குமரபுரம் அருகே உள்ளது பனம்தொடி முனீஸ்வரர் கோவில். இங்கு எல்லா ஆண்டும் சித்திரை மாதம் தாலப்பொலி மஹோத்சவம் நடப்பது வழக்கம். நடப்பாண்டு உற்சவம் நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

நேற்று காலை 5:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் விழா துவங்குகிறது. தொடர்ந்து பிரம்மரக்ஷஸ் பூஜை மற்றும் உஷ பூஜை நடைபெற்றது. 9:00 மணிக்கு சொக்கநாதபுரம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் சுவாமி கோவிலில் இருந்து திருமஞ்சனம் எழுந்தருளல் ஊர்வலம் புறப்படும் நிகழ்வு நடந்தது. தொடர்ந்து உற்சவருக்கு மங்கள வாத்தியம் முழங்க அபிஷேகம் நடந்தது. ​10:00 மணிக்கு தேனாரி ராஜேஷ் குழுவினரின் பஞ்சாரி மேளம் செண்டை மேளமும், அதனைத் தொடர்ந்து மூலவருக்கு பூர்ணாபிஷேகமும், 11.30 மணிக்கு மஹா தீபாராதனையும் நடைபெற்றது. மதியம் 12.30 மணி முதல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ​மாலை 5 மணிக்கு குமரபுரம் உயர்நிலைப் பள்ளி முன்பிலிருந்து செண்டை மேளம் மூன்று யானைகள் அணிவகுப்புடன் காழ்ச்ச சீவேலி ஊர்வலம் நடைபெற்றது. இரவு 7:00 மணிக்கு சொவ்வாலூர் மோகனன் வாரியர் தலைமையிலான பாண்டிமேளம் என்ற செண்டை மேளம் அரங்கேறியது. 7:30க்கு ​விழாவின் முக்கிய அம்சமான தாலப்பொலி எழுந்தருளும் வைபவம் நடந்தது. ​10:00 மணிக்கு நடைபெற்ற அத்தாழ பூஜையுடன் விழா நிறைவடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !