மாரியம்மன் திருவிழா புஷ்ப ஊஞ்சல் உற்சவம்
ADDED :155 days ago
குன்னுார்: குன்னுார் தந்தி மாரியம்மன் கோவிலில் ஒரு மாதத்திற்கும் மேல் நடந்து வந்த சித்திரை தேர் திருவிழாவில் புஷ்ப ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
குன்னுார் தந்தி மாரியம்மன் கோவிலில் சித்திரை தேர்திருவிழா கடந்த மாதம், 4ல் துவங்கி, தினமும் பல்வேறு உபயதாரர்கள் சார்பில் அபிஷேக, ஆராதனை, பூகுண்டம், முத்து பல்லக்கு, புஷ்ப பல்லக்கு, அம்மன் திருவீதி உலா உள்ளிட்டவை நடந்தன. நிறைவாக நேற்று பிராமணர் சங்கத்தினர் சார்பில் புஷ்ப ஊஞ்சல் உற்சவம் நடந்தது. காலை, 9:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், உலக நன்மைக்கு வேண்டி லலிதா சகஸ்ர நாம பாராயணம் நடந்தது.
தொடர்ந்து கஞ்சி வார்த்தல், புஷ்ப ஊஞ்சல் வைபவம், சாக்ஸபோன் பக்தி இசை நிகழ்ச்சி அம்மன் திருவீதி உலா நடந்தன.