செம்பொற்சோதிநாதர் கோவிலில் நடராஜருக்கு சித்திரை திருவோண சிறப்பு வழிபாடு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சாமியார் மடம் செம்பொற்சோதிநாதர் கோவிலில் நடராஜருக்கு சித்திரை திருவோண சிறப்பு வழிபாடு நடந்தது.
நடராஜருக்கு சித்திரை திருவோணம், ஆனி திருமஞ்சனம், ஆவண சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி, மார்கழி திருவாதிரை, மாசி சதுர்த்தசி ஆகிய 6 நாட்கள் சிறப்பு அபிஷேகங்கள் நடக்கும். அதன்படி சித்திரை திருவோண நாளான இன்று கள்ளக்குறிச்சி சாமியார் மடம் செம்பொற்சோதிநாதர் கோவிலில் பன்னிரு திருமுறைகள் ஒதி வழிபாடுகள் மற்றும் அபிஷேகம் நடந்தது. அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் ஆகிய சமயக்குரவர்கள் நால்வருக்கு பூஜைகள் நடத்தப்பட்டது. இதேபோன்று கள்ளக்குறிச்சி சிவகாமி அம்மை உடனுறை சிதம்பரேஸ்வரர் , நீலமங்கலம் ஏகாம்பரேஸ்வரர், ஏமப்பேர் விஸ்வநாதர் கோவில்களில் நடராஜபெருமானுக்கு ருத்ர மந்திரங்கள் வாசித்து திருவோண சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது.