ஆலகிராமம் செல்லியம்மன் கோவிலில் தேர் திருவிழா
ADDED :2 days ago
மயிலம்: மயிலம் அருகே உள்ள ஆலகிராமம் கிராம தேவதையான செல்லியம்மன் தேர் திருவிழா கோலாகலமாக நடந்தது.
ஆலகிராம மக்களின் கிராம தேவதையான செல்லியம்மன் சுவாமிக்கு கடந்த ஏப். 1ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. இதை முன்னிட்டு தினசரி அம்மனுக்கு வழிபாடு தீபாரதனை நடந்த வந்தது. அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அம்மன் வீதி உலா நடந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று மாலை 5:00 மணிக்கு செல்லியம்மன் சுவாமி அலங்கரிக்கப்பட்ட தேரில் கிராம வீதிகளில் பவனி வந்தார். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.