உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அனைத்தும் அறிந்தவர் சாய்பாபா; குனியமுத்தூரில் பக்தி சொற்பொழிவு

அனைத்தும் அறிந்தவர் சாய்பாபா; குனியமுத்தூரில் பக்தி சொற்பொழிவு

போத்தனூர்: குனியமுத்தூரிலுள்ள சத்ய சாய் சேவா சமிதியில், நேற்று ஈஸ்வரம்மா தினம் முன்னிட்டு, பக்தி சொற்பொழிவு நடந்தது. இதில் புட்டபர்த்தி, பிரசாந்தி நிலையத்தை சேர்ந்த மல்லிகேஸ்வர் பக்தி சொற்பொழிவாற்றினார். அப்போது அவர், நாம் செய்தது, செய்யப்போவது, திட்டமிட்டது என அனைத்தையும் அறிந்தவர் சாய்பாபா. நமக்கான தேவைகளை நிறைவேற்றச் செய்வதும் அவரே. அவர் அறியாமல் எதுவும் நடக்காது. நமக்கு சங்கல்பம் இருந்தால் மட்டுமே அவருடைய தரிசனம் கிடைக்கும். நமது எண்ணங்களை நேர்மறையாக கொண்டு, மற்றவர்கள் மீது அன்பு செலுத்தி வாழவேண்டும், என்றார். தொடர்ந்து, ராம் லட்சுமண் குழுவினரின் பஜனை நடந்தது. ஏற்பாடுகளை சேவா சமிதியின் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !