உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மண்ணை மலையாக்கிய திருவிழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்

மண்ணை மலையாக்கிய திருவிழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்

மேலுார், :திருக்கார்த்திகையை முன்னிட்டு மேலுார் நரசிங்கம்பட்டியில் மண்ணை மலையாக்கும் திருவிழாவில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

நரசிங்கம்பட்டி பெருமாள் மலையடிவார கோயிலில் மழை பெய்து விவசாயம் செழிக்கவும், நோய் நொடியின்றி வாழவும் மண்பிடித்திருவிழா கொண்டாடப்பட்டது. நரசிங்கம்பட்டி, வெள்ளரிப்பட்டி,தெற்குத்தெரு உட்பட பல கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கோயில் முன் ஓடையில் நீராடினர். பிறகு அங்கிருந்து ஒரு பிடி மணலை எடுத்து வந்து கோயில் முன் போட்டு வழிபட்டனர். ஆண்டுதோறும் பக்தர்கள் போட்ட மண் இன்று மலை போல் குவிந்துள்ளது.இந்த மண் மலையை மூன்று முறை சுற்றி வந்து பக்தர்கள் உப்பு, மிளகு மற்றும் முடிகாணிக்கை செலுத்தினர். கரும்பு தொட்டிலில் குழந்தையை சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதேபோல் மேலவளவு கருப்பு கோயிலுக்கு வந்த பக்தர்கள் மலை மீது ஏறி கற்களை வீசியும், விளக்கு ஏற்றியும் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !