அணைக்கு தண்ணீர் விட வலியுறுத்தி 10,008 தீபம் ஏற்றி வழிபாடு
ADDED :2179 days ago
வெள்ளகோவில்: வட்டமலைக்கரை அணைக்கு தண்ணீர் விட வலியுறுத்தி, விவசாயிகள் 10,008 தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர். வெள்ளகோவில் அருகில், வட்டமலைக்கரை அணை கட்டி, 39 ஆண்டுகள் ஆன நிலையில் இதுவரை இப்பகுதியில் வாய்க்காலில் தண்ணீர் வரவில்லை என விவசாயிகள் புகார் கூறுகின்றனர்.எனவே, வட்டமலைக்கரை ஓடை அணை நீரினை பயன்படுத்துவோர் சங்கம் மூலம் அமராவதி ஆற்றின் உபரி நீரை அணையில் தேக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தனர். இருப்பினும், நிறைவேறவில்லை.இதனை அரசுக்கு நினைவூட்டும் விதமாக, நேற்று, 10,008 தீபங்கள் ஏற்றி விவசாயிகள், பெண்கள் வழிபட்டனர்.