முடியனுார் சிவன் கோவிலில் தீப திருவிழா சிறப்பு பூஜை
ADDED :2130 days ago
தியாகதுருகம்: முடியனுார் ஆதி அருணாசலேஸ்வரர் கோவிலில் தீப திருவிழா சிறப்பு பூஜை நடந்தது. தியாகதுருகம் அடுத்த முடியனுார் கிராமத்தில் 1000 ஆண்டுகள் பழமையான ஆதி அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. கார்த்திகை தீப திருவிழாவையொட்டி, நேற்று காலை மூலவர் லிங்கத்திற்கு அபிஷேக ஆராதனை நடந்தது. அதனைத் தொடர்ந்து பரணி தீபம் ஏற்றப்பட்டது. மாலை அர்த்தநாரீஸ்வரர் கோலத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது கோபுர விமானத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இரவு சர்வ அலங்காரத்தில் சுவாமி திருவீதியுலா நடந்தது. பெண்கள் மாவிளக்கு தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர்.