உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குன்றக்குடியில் பங்குனி விழா மார்ச் 23ல் தொடக்கம்

குன்றக்குடியில் பங்குனி விழா மார்ச் 23ல் தொடக்கம்

காரைக்குடி: குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயில் பங்குனி உத்திரத் திருவிழா மார்ச் 23 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.


குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு மார்ச் 22ம் தேதி மாலை 5:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை நடக்கிறது. மார்ச் 23 அதிகாலை 5:00 முதல் 5:45 மணிக்குள் கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. தினமும் இரவு, சண்முகநாதன் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். மார்ச் 27ம் தேதி மாலை திருக்கல்யாணம், பூப்பல்லக்கு நிகழ்ச்சி நடைபெறுகிறது. மார்ச் 30ம் தேதி தெப்பத் திருவிழா நடைபெறுகிறது. மார்ச் 31ம் தேதி அதிகாலை 5:30 மணிக்கு தேருக்கு சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும் மாலை 5:00 மணிக்கு தேரோட்டமும் நடக்கிறது. ஏப். 1 ம் தேதி காலை தீர்த்தவாரியும், இரவு மயிலாடும்பாறையில் சுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை குன்றக்குடி பொன்னம்பல அடிகள் தலைமையில் விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !