உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடலூர் கோவில்களில் கார்த்திகை தீப விழா

கடலூர் கோவில்களில் கார்த்திகை தீப விழா

கடலூர்:கடலூரில் உள்ள பல்வேறு கோவில்களில் கார்த்திகை தீபத்தையொட்டி, தீபம் ஏற்றி, சொக்கப்பனை கொளுத்தி வழிபட்டனர்.கார்த்திகை தீப திருவிழா நேற்று முன்தினம் (டிசம்., 10ல்) முதல் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் தீபம் ஏற்றி, ஏராளமானோர் வழிப்பட்டனர்.

இதே போல் புதுப்பாளையம் தரைகாத்த காளியம்மன் கோவில், மாரியம்மன் கோவில், திருப் பாதிரிப்புலியூர் வேதவிநாயகர் கோவில் ,நாகம்மன் கோவில்களில் கார்த்திகை தீபத்தை முன்னி ட்டு சொக்கப்பனை கொளுத்தி வழிபட்டனர்.

ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். தெருக்களில் சிறுவர்கள் பனை பூக்களை கொண்டு மாவளி தயாரித்து சுற்றி மகிழ்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !