உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூர் ஐயப்பன் கோவிலில் பரதநாட்டியம்

திருப்பூர் ஐயப்பன் கோவிலில் பரதநாட்டியம்

திருப்பூர்:திருப்பூர் ஐயப்பன் கோவிலில், 60வது மண்டல பூஜை வைர விழா நடந்து வருகிறது. இதையொட்டி, தினமும் இரவு, 7:00 மணிக்கு கலை நிகழ்ச்சி நடக்கிறது. நேற்று முன்தினம் (டிசம்., 10ல்) இரவு, சேலம் தாரா குழுவினரின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடந்தது.

இதில், சுவாமி ஸ்ரீ ஐயப்பன் பக்த ஜன சங்க தலைவர் ஈஸ்வரமூர்த்தி, துணை தலைவர் பால தண்டபாணி, பொது செயலாளர் மோகன்ராஜ், இணை செயலாளர் அசோக்குமார், பொருளாளர் சீனிவாசன் உட்பட நிர்வாகிகள், ஐயப்ப பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !