உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) பணப் புழக்கம் அதிகரிக்கும்

மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) பணப் புழக்கம் அதிகரிக்கும்

கண்ணியமுடன் நடக்க விரும்பும் மீன ராசி அன்பர்களே!

கடந்த மாதத்தை விட நன்மைகள் அதிகரிக்கும்.  சூரியன் இந்த மாதம் 10ம்  இடம் வந்து நற்பலன் அளிக்கத் தொடங்குவார். புதன்  டிச.21க்கு பிறகு தனுசு  ராசிக்கு வந்து சுபபலன் அளிப்பார். இது தவிர சுக்கிரன் மாறினாலும் மாதம்  முழுவதும் நன்மை செய்வார்.  சுக்கிரன், சூரியனால் பொருளாதார வளம்  அதிகரிக்கும். எடுத்த செயலை சிறப்பாக செய்து முடிக்கலாம். செல்வாக்கு  மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர  வசதிகள் பெருகும். உங்கள் ஆற்றல் மேம்படும்.

குடும்பத்தில் வசதி, வாய்ப்பு பெருகும். மனதில் சந்தோஷம் குடியிருக்கும்.  எதிர்பாராத பணவரவு இருக்கும். சொந்தங்களின் வருகை இருக்கும். விருந்து,  விழா என அடிக்கடி செல்வீர்கள். சகோதரிகள் உதவிகரமாக இருப்பர். டிச.21க்கு  பிறகு அவப்பெயர், பொல்லாப்பு, மனதில் ஏற்பட்ட வேதனை முதலியன மறையும். தடைபட்ட திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். தம்பதியிடையே அன்பு மேலோங்கும்.  பெண்கள் ஆதரவுடன் செயல்படுவர். அவர்களால் பொன், பொருள் சேரும்.   

பெண்கள் மனதில் நினைத்ததை வெற்றிகரமாக செய்து முடிப்பர். கையில்  பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த  பின்னடைவு மறையும். கணவர் மற்றும் குடும்பத்தாரின் மத்தியில் நற்பெயர் பெறுவர். குழந்தைகளால் பெருமை  கிடைக்கும். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். வேலைக்கு செல்லும்  பெண்களுக்கு புதிய பதவி தேடி வரும். சுயதொழில் புரியும் பெண்களுக்கு வங்கி  கடன் எளிதாக கிடைக்கும். செவ்வாயால் உஷ்ணம், பித்தம், மயக்கம், சளி  போன்ற உபாதைகள் ஏற்படலாம். டிச.28 க்கு பிறகு உடல்நிலை சீராகும்.  பயணத்தின் போது கவனம் தேவை.

சிறப்பான பலன்கள்

* தொழிலதிபர்களுக்கு எதிர்பாராத வகையில் ஆதாயம் கிடைக்கும். எதிரிகளின்  இடையூறை முறியடிக்கும் வல்லமை பெறுவர். டிச.21க்குப் பிறகு பெண்களை  பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும்.
* வியாபாரிகள் கடந்த காலத்தில் மனஉளைச்சலால் தவித் திருக்கலாம். இந்த  மாதம் நிலைமை சாதகமாக அமையும். லாபம் படிப்படியாக அதிகரிக்கும்.
* அரசு வேலையில் இருப்பவர் களுக்கு பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
* தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு சக பெண் ஊழியர்கள்  ஆதரவுடன் இருப்பர்.
* வக்கீல்கள்  புகழோடு காணப் படுவர். வருமான உயர்வால் ஆடம்பர வசதிகள்  கிடைக்கப் பெறுவர்.
* ஆசிரியர்களுக்கு வழக்கமாக கிடைக்க வேண்டிய சம்பள உயர்வு, பதவி  உயர்வுக்கு தடையிருக்காது.
* பொதுநல சேவகர்கள் மக்கள் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர். வேலைப்பளு குறையும்.
* கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். சக கலைஞர்கள்  ஆதரவுடன் செயல்படுவர்.  
* விவசாயிகள் நெல், கோதுமை, சோளம், பழவகைகள் மூலம் ஆதாயம்  அடைவர். டிச. 21க்கு பிறகு கால்நடை வளர்ப்பில் லாபம் உயரும்.
* பள்ளி மாணவர்கள் கல்வியில் வளர்ச்சி காண்பர். போட்டிகளில் பங்கேற்று  வெற்றி பெறுவர். கெட்ட சகவாசத்திற்கு விடை கொடுப்பர்.

சுமாரான பலன்கள்

* தொழிலதிபர்களில் சிலர் தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்கலாம்.  டிச.21 வரை நண்பர் விஷயத்தில் விழிப்புடன் செயல்படவும்.  
* ஐ.டி., துறையினர் பணிச்சுமைக்கு ஆளாவர். பணியில் பொறுமை தேவை.  அதிகாரிகளிடம் அனுசரித்துப் போகவும்.
* மருத்துவர்களுக்கு வீண்செலவு ஏற்படும். எதிரி தொல்லை உருவாகும்.  அலைச்சலால் உடல்நலக்குறைவு ஏற்படும்.
* போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் சுமாரான நிலையில் இருப்பர்.  வேலைப் பளு அதிகமாக இருக்கும்.
* அரசியல்வாதிகளுக்கு மனதில் இனம் புரியாத வேதனை குடி கொண்டிருக்கும்.  தொண்டர்களின் வகையில் செலவு அதிகரிக்கும்.
* விவசாயிகளுக்கு வழக்கு, விவகாரங்களில் முடிவு சுமாராக இருக்கும்.
* கல்லூரி மாணவர்கள் சிரத்தை எடுத்து படிக்க வேண்டும். ஆசிரியரின்  அறிவுரையை பின்பற்றுவது நல்லது.  

* நல்ல நாள்:
டிச.17,18,19, 20,26,27,28,29 ஜன.2,3,7,8,14

* கவன நாள்: டிச.21,22,23 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 1,9
* நிறம்: சிவப்பு, வெள்ளை

பரிகாரம்:
●  சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகர் வழிபாடு
●  சனியன்று சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம்
●  புனர்பூச நட்சத்திரத்தன்று ராமபிரான் தரிசனம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !