உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதி ஏழுமலையானுக்கு ஒரே நாளில் ரூ.3 கோடி நன்கொடை

திருப்பதி ஏழுமலையானுக்கு ஒரே நாளில் ரூ.3 கோடி நன்கொடை

திருப்பதி: திருமலை ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் ஏற்படுத்தியுள்ள  அறக்கட்டளைக ளுக்கு பக்தர்கள் நன்கொடை வழங்கி வருகின்றனர். அதன்படி  நேற்று 13ம் தேதி 3 கோடி ரூபாய் வந்தது. அன்னதான அறக்கட்டளைக்கு 1.75 கோடி ரூபாய்  நன்கொடை வழங்கப்பட்டது. அமெரிக்கா வாழ் இந்தியரான வெங்கட் என்பவர்  அன்னதான அறக்கட்டளைக்கு 1.05 கோடி ரூபாயும் பஞ்சாப் மாநிலம் சண்டிகரை  சேர்ந்த பார்மசூடிக்கல் நிறுவனத்தின் சி.எம்.டி.கோயல் என்பவர் 51 லட்சம்  ரூபாய் எஸ்.வி. அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தினர் 10 லட்சம் ரூபாயும்  அளித்தனர்.மேலும் பெயர் சொல்ல விரும்பாத பக்தர் ஒருவர் 3 ஆண்டுகளுக்கு  தேவையான ஏழுமலையான் மேல்சாட் வஸ்திரத்திற்காக 1.20 கோடி ரூபாய்  நன்கொடையாக வழங்கியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !