உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலை பக்தர்களுக்கு புதிய தகவல் மையங்கள்

சபரிமலை பக்தர்களுக்கு புதிய தகவல் மையங்கள்

சென்னை: தமிழகத்தில் இருந்து, சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள்  வசதிக்காக, ஆண்டுதோறும், அறநிலையத் துறை சார்பில், தகவல் மையங்கள்  அமைக்கப்பட்டு வருகின்றன.இந்த ஆண்டு, தேனி - -குமுளி சாலையில் உள்ள வீரபாண்டி, கவுமாரியம்மன்  கோவில், குற்றாலம் அடுத்த புளியரை, கன்னியாகுமரி மாவட்டம்,  களியக்காவிளை ஆகிய இடங் களில், தகவல் மையம்  அமைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், கோவை- - பாலக்காடு நெடுஞ்சாலையில் உள்ள நவக்கரை மலையாள தேவி துர்கா பிராட்டியம்மன் கோவில், பொள்ளாச்சி- -  பாலக்காடு நெடுஞ்சாலையில் உள்ள ராமநாதபுரம், பத்ரகாளி அம்மன் கோவில்  ஆகியவற்றில், புதிய தகவல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இம்மையங்கள்,  2020 ஜன., 31 வரை இயங்கும். அவற்றை தொடர்பு கொள்ள, 1800 4251757  என்ற, கட்டணமில்லா தொலைபேசி எண்ணை பயன்படுத்தலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !