உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கன்னியாகுமரி அருகே குமாரகோயிலுக்கு காவடி எடுத்த போலீஸ்

கன்னியாகுமரி அருகே குமாரகோயிலுக்கு காவடி எடுத்த போலீஸ்

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை குமாரகோயிலுக்கு கார்த்திகை  மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு போலீஸ் மற்றும் பொதுப்பணித்துறையினர்  காவடி எடுத்து சென்றனர்.தக்கலை அருகே வேளிமலை குமாரகோயிலுக்கு மன்னர் காலத்திலிருந்தே  மக்களின் அமைதியான வாழ்க்கைக்காக போலீசாரும், செழிப்பான வாழக்கைக்காக  பொதுப்பணித்துறை யினரும் கார்த்திகை மாத கடைசி வெள்ளியன்று காவடி  எடுத்து வருவது வழக்கம். நேற்று 13ம் தேதி தக்கலை போலீஸ் ஸ்டேஷனில் இருந்தும் போலீசாரும், பொதுப்பணித்துறை அலுவலக த்தில் இருந்து ஊழியர்களும் காவடி எடுத்து குமாரகோவில் வந்தனர்.இதுபோல பத்மனாபபுரம், தென்கரை, வெட்டிக்கோணம், வழிக்கலம்பாடு, முட்டைக்காடு, முத்தலக்குறிச்சி, தக்கலை, குலசேகரம் உள்ளிட்ட ஏராளமான இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் காவடிகள் எடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !