திருவண்ணாமலை தீப திருவிழாவில் சுப்பிரமணியர் தெப்பம் உற்சவம்
ADDED :2124 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நேற்று (டிசம்., 13ல்) சுப்பிரமணியர் தெப்ப உற்சவம் நடந்தது. திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த, 10ல், மஹா தீபம் ஏற்றப்பட்டது.
தொடர்ந்து, 11 நாட்கள் எரியும். இந்நிலையில், நேற்று 13ம் தேதி அய்யங்குளத்தில் சுப்பிரமணியர் தெப்பம் உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு, வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர் வண்ண மலர்கள் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில், குளத்தில் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு வழிபட்டனர்.