காரமடை அரங்கநாத சுவாமி கோவில் மாசி மக தேரோட்டம் ; பக்தர்கள் தரிசனம்
கோவை காரமடை அருள்மிகு அரங்கநாத சுவாமி கோவில் மாசி மக தேரோட்டம் 02.03.2026 அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுக்க நகர வீதிகளில் தேர் பவனி வந்தது. தேரின் நடுவே உள்புறத்தில் உற்சவர் அரங்கநாத பெருமாள் ஸ்ரீதேவி -பூதேவி சமேதராய் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த விழாவானது கடந்த மாதம் 23-02-2026 அன்று கிராம சாந்தியுடன் துவங்கியது. தொடர்ந்து அன்ன வாகனம் | சிம்ம வாகனம் | அனுமந்த வாகனம் | கருட சேவை | ஸ்ரீ பெட்டத்தம்மன் அழைப்பு, யானை வாகனம், திருக்கல்யாண உற்சவம் ஆகியன நடைபெற்றது. 03.03.2016 செவ்வாய்க்கிழமை அன்று பரவேட்டை, தெப்போற்சவம் சந்தான பூஜை,வசந்த விழா ஆகியோற்றுடன் வரும் 06-03.2026 அன்புடன் விழா நிறைவடையும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தேரோட்டத்தில் கோவை, மேட்டுப்பாளையம், உதகை, அவிநாசி, அன்னூர், புளியம்பட்டி, சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.